தமிழக வணிகர் சம்மேளனம்
வணிகர்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கும் நிறுவனம்
அறிமுகம்
2013-ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, தொழில் முனைவர்களுக்கு ஆலோசனை, அரசு அனுமதிகள், நிதி உதவிகள் மற்றும் காப்பீடு போன்ற ஆதரவு சேவைகளை வழங்குகிறது. வணிக வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டில் வணிகர்களை ஊக்குவிக்கிறது.
சேவைகள்
- அரசு மற்றும் தனியார் வங்கிகளின் நிதி உதவிகளை ஏற்படுத்துதல்
- அரசு திட்டங்களை வணிகர்களிடம் கொண்டு சேர்த்தல்
- வணிக பிரச்சனைகளுக்கு சட்ட உதவி வழங்கல்
- மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீடு வழங்குதல்
- கல்வி மற்றும் திருமண நிதி உதவி
- சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வணிகத்தில் இணைத்தல்
நோக்கம்
வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக செயல்பட்டு, அரசு–வணிகர் உறவுக்குப் பாலாக செயல்படுவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
அமைப்பின் சேவை
ஆ.வரதன் ஆறுமுகம்
நிறுவனர்
வணிக வரலாற்றில் ஓர் மைல்கல்லாய் தமிழக வணிகர் சம்மேளனம் உலகெங்கும் வாழும் தமிழ் வணிக உறவுகளை உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் வாயிலாக ஒருங்கிணைந்து 2018ஆம் ஆண்டு இந்தியா முதல் மலேஷியா மொரிசியஸ் இலங்கை துபாய் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆண்டு தோறும் மாநாடுகளை நடத்தி தமிழ் வணிக உறவுகளையும் அந்நாட்டில் உள்ள வணிக அமைப்புகளையும் கௌரவித்து விருதுகள் வழங்கி வருகின்றது. இதற்கு வித்திட்ட உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனர் ஐயா. திரு. VRS சம்பத் அவர்களுக்கு தமிழக வணிகர் சம்மேளனம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.
அமைப்பு தொடங்கிய நாளில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளராக தனது பணியை தொடங்கி பின் தலைமை செயற்குழு உறுப்பினராக மாவட்ட செயலாளராக பதவியேற்று தலைமை பண்பில் சிறந்து இன்று தமிழக வணிகர் சம்மேளனத்தின் தகுதி வாய்ந்த தலைவராக பொறுப்பேற்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பை அறிய செய்து நிர்வாகிகளின் நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்கும் அன்பிகினிய இளவல் திரு. தமிழ்செல்வம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
தமிழக வணிகர் சம்மேளனத்திற்கு தலைமையேற்று உங்களை வழி நடத்தி கொண்டிருக்கும் தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் திரு. தமிழ்செல்வம் அவர்களுடன் கரம் கோர்த்து அமைப்பை வளப்படுத்த உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Contact Us
அமைப்பு தொடங்கிய நாளில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளராக தனது பணியை தொடங்கி பின் தலைமை செயற்குழு உறுப்பினராக மாவட்ட செயலாளராக பதவியேற்று தலைமை பண்பில் சிறந்து இன்று தமிழக வணிகர் சம்மேளனத்தின் தகுதி வாய்ந்த தலைவராக பொறுப்பேற்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பை அறிய செய்து நிர்வாகிகளின் நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்கும் அன்பிகினிய இளவல் திரு. தமிழ்செல்வம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
தமிழக வணிகர் சம்மேளனத்திற்கு தலைமையேற்று உங்களை வழி நடத்தி கொண்டிருக்கும் தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் திரு. தமிழ்செல்வம் அவர்களுடன் கரம் கோர்த்து அமைப்பை வளப்படுத்த உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ப.தமிழ் செல்வம்
தலைவர்
தமிழக வணிகர் சம்மேளனம் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் வணிகம் செய்ய விரும்பும் தொழில் முனைவருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கவும், அவர்கள் தொழில் தொடங்கி சிறப்பாக தொழில் செய்வதற்கு தேவையான அரசு ஆவணங்களை பெற்று தரவும், தொழில் தொடங்கி வணிகத்தை சிறப்பாக செய்வதை ஊக்குவிக்கவும், வணிகர்கள் வணிகத்தை விரிவுபடுத்தி ஏற்றுமதி இறக்குமதி துறையில் சிறந்து விளங்குவதற்கு உதவி செய்யவும், சிறு குரு நடுத்தர வணிகர்களுக்கு பாதுகாப்பாகவும் வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து அரசின் திட்டங்கள் என்ன என்பதை வணிகர்களுக்கு தெரியப்படுத்தவும், அரசின் திட்டங்களை அமைப்பின் வாயிலாக வணிகர்களுக்கு கொண்டு சேர்க்கவும், வணிகர்கள் நலன் காக்க வணிகத்தை விரிவுபடுத்த அரசு தனியார் வங்கிகள் மூலம் நிதி உதவிகள் பெற்றுத் தரவும், அரசு வழங்கும் நலத் திட்டங்களில் வணிகர்களை இணைக்கவும், அமைப்பின் மூலம் வணிகர்களை வணிகர் நலவாரியம் மற்றும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற அரசு வாரியங்களில் இணைக்கவும், அதன் வாயிலாக வணிகர்கள் வாழ்வாதாரம் சிறக்கவும், பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் அரசுக்கு இடையே உறவு பாலமாக இருந்து தேவைப்படும் உதவிகளை அமைப்பின் வாயிலாக பெற்றுத் தரவும், வணிகர்களுக்கு வணிகத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அரசு மற்றும் தனியார் மூலம் வணிகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதற்கும், தேவைப்பட்டால் நமது அமைப்பின் வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றங்களை அணுகி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், வணிகர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடுகளை பெற்றுத் தரவும், பிரபல மருத்துவ மனைகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி வணிகர்கள் உடல்நிலை பேணி காக்கவும், சிறு குறு வணிகர்களின் குழந்தைகள் பள்ளி படிப்பு முதல் பட்ட படிப்பு வரை உதவுவதற்கும், வணிகர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும், நாட்டின் முதுகெலுமான விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயம் செழிக்க அவர்களை வணிகர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்கவும், மீனவர்களின் தொழில் மேம்படவும், அவர்களின் வணிகம் பெருக்கவும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் வணிகம் சார்ந்த பொருளாதார பிரச்சனைகளை அமைப்பின் மூலமாகவும், அரசின் மூலமாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும் தீர்ப்பதற்கும் முழுமையாக தமிழக வணிகர் சம்மேளனம் பாடுபடும்.
Contact Us
சமீபத்திய 2025 நிகழ்வுகள்
தொடர்பு கொள்ள
எங்களை தொடர்பு கொள்ள கீழ்காணும் முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தவும்.
முகவரி
No, 16 பாலாஜி காலனி, வேளச்சேரி, சென்னை- 600 042
தமிழ்நாடு, இந்தியா
தமிழ்நாடு, இந்தியா
மின்னஞ்சல்
thamizhagavanigarsammelanam@gmail.com